பௌத்த மதத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் தொடர்பில் மல்வத்து, அஸ்கிரி பீட மகாநாயக்க தேரர்கள் கலந்துகொண்ட விசேட கலந்துரையாடல் நேற்று (15) மல்வத்து மகா விகாரையின் மகாநாயக்க தேரரின் வாசஸ்தலத்தில் நடைபெற்றது.
பௌத்த மத சிந்தனைகளை சிதைக்கும் விதத்தில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து இதன் போது விரிவாக ஆராயப்பட்டதாகவும், முக்கிய விடயங்கள் குறித்து தீர்மானங்கள் முன்னெடுக்கப்பட்டதாகவும் மல்வத்து பீட போசகர் ஆனமடுவே தம்மதஸ்ஸி தேரர் தெரிவித்துள்ளார்.

