Sunday, August 31, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

பௌத்த இன­வா­தக் குழுக்­க­ளுக்கு ஒரு போதும் அஞ்­சப்­போ­வ­தில்லை!!

March 4, 2018
in News, Politics, Uncategorized, World
0

ஆயு­தம் தாங்­கிய புலி­க­ளுக்கே அஞ்­சாத நானும், எனது மாவட்ட மக்­க­ளும் பௌத்த இன­வா­தக் குழுக்­க­ளுக்கு ஒரு போதும் அஞ்­சப்­போ­வ­தில்லை. இவ்­வாறு பிரதி அமைச்­சர் எச்.எம்.எம்.ஹரீஸ் தெரி­வித்­தார்.

அம்­பாறை வன்­மு­றை­யு­டன் தொடர்­பு­டைய சந்­தே­கத்­தில் கைது செய்­யப்­பட்ட 5 பேரும், இரண்டு நாள்­க­ளில் நீதி­மன்­றால் பிணை­யில் விடு­விக்­கப்­பட்­ட­னர். இது தொடர்­பில் கருத்­துத் தெரி­வித்­த­போதே அவர் இவ்­வாறு கூறி­யுள்­ளார்.
அவர் தெரி­வித்­த­தா­வது-,

அம்­பா­றை­யில் அதி­கா­ர­மிக்க சிங்­கள அர­சி­யல்­வா­தி­க­ளின் ஆத­ர­வு­டன், பொலி­ஸா­ரின் நெறிப்­ப­டுத்­த­லின்­கீழ், அம்­பாறை பள்­ளி­வா­ச­லைத் தாக்­கிய பௌத்த சிங்­கள இன­வா­தி­கள் வெள்­ளிக்­கி­ழமை பிணை­யில் விடு­தலை செய்­யப்­பட்­டுள்­ள­னர். இந்த நல்­லாட்­சியை நம்­பிய, முஸ்­லிம்­க­ளுக்கு வழங்­கப்­பட்ட தண்­ட­னை­யா­கவே இதை நோக்­கு­கி­றேன்.

அம்­பாறை மாவட்ட தாக்­கு­த­லுக்­குப் பின்­னர் முஸ்­லிம்­கள் பொறு­மை­யா­க­வும், நிதா­ன­மா­க­வும் காணப்­பட்­ட­னர். ஒரு சிறிய இன­வாத கூட்­டத்தை திருப்­திப்­ப­டுத்­து­வ­தற்­காக முஸ்­லிம்­க­ளுக்கு கொடுமை செய்து, பள்­ளி­வா­சல் தாக்­கு­த­லு­டன் தொடர்­பு­டை­ய­வர்­களை அரசு மறை­மு­க­மாக விடு­தலை செய்­துள்­ளது.
முஸ்­லிம்­களை அரசு ஏமாற்­றி­யுள்­ளது. இதற்­கான பயனை மிக­வி­ரை­வில் இந்த அரசு அடை­யும். அதற்­கான அதிர்ச்சி வைத்­தி­யத்தை இந்த அர­சுக்கு நாங்­கள் கொடுப்­போம்.எனது மாவட்ட முஸ்­லிம் இளை­ஞர்­கள் கொதித்­துப் போயுள்­ள­னர். அவர்­களை நானும், பள்­ளி­வா­சல் நிர்­வா­கங்­க­ளும் அமை­திப்­ப­டுத்தி வைத்­தி­ருக்­கி­றோம். ஆயு­தம் தாங்­கிய புலி­க­ளுக்கே அஞ்­சாத நானும், எனது மாவட்ட மக்­க­ளும் பௌத்த இன­வா­தக் குழுக்­க­ளுக்கு ஒரு கால­மும் அஞ்­சப்­போ­வ­தில்லை.

பல­தொ­ழில்­நுட்­பங்­கள் உள்ள நிலை­யில், மறை­கா­ணி­யின் (சி.சி.ரி.வி) துணை­யு­டன் பள்­ளி­வா­சலை தாக்­கி­ய­வர்­களை மிக இல­கு­வில் கைது செய்­தி­ருக்­க­லாம். அவ்­வா­றில்­லா­மல் அவர்­க­ளைச் சிறை­வைக்­காது ஒரு சுதந்­தி­ரப் பற­வை­க­ளாக பறக்க விட்­டுள்­ள­னர்.

தற்­போதை நல்­லாட்சி அரசை பௌத்த சிங்­கள இன வாதி­களே வழி நடத்­து­கின்­ற­னர். அத­னால்­தான் முஸ்­லிம் விவ­கா­ரங்­கள் பின்­னுக்கு தள்­ளப்­ப­டு­கின்­றன. எனது கட்­சி­யின் ஏனைய நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளு­டன் பேசி அடுத்த கட்ட நட­வ­டிக்­கையை மிக விரை­வில் அறி­விப்­போம் – என்­றார்.

Previous Post

வல்லை முனி­யப்­பர் கோவி­ல­டியில் விபத்து ஒருவர் பலி

Next Post

ஆனோல்ட்­டைத் தவிர்த்து வேறு ஒரு­வ­ரின் பெயரை முன்­மொ­ழிந்­தால் பரி­சீ­லிப்­ப­தற்கு ஈ.பி.டி.பி. தயார்

Next Post

ஆனோல்ட்­டைத் தவிர்த்து வேறு ஒரு­வ­ரின் பெயரை முன்­மொ­ழிந்­தால் பரி­சீ­லிப்­ப­தற்கு ஈ.பி.டி.பி. தயார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures