பியகம, பேரகஸ்ஹந்திய பகுதியில் நான்கு இலட்சத்திற்கும் அதிகமான ஐயாயிரம் ரூபாய் போலி நாணயத்தாள்களுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போது குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
40 வயதான குறித்த சந்தேகநபர், மல்வானை பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் குறிப்பிடப்படுகின்றது.
சந்தேக நபரை மஹர நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

