போதைப் பொருள் சுற்றிவளைப்புக்களுக்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் உருவாக்கமே காரணமாகும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த அரசாங்கம் அரசியலமைப்பின் 19 ஆம் திருத்தச் சட்டத்தை உருவாக்கி பொலிஸார் சுயாதீனமாக செயற்படுவதற்கான சூழலை உருவாக்கியுள்ளதால் போதைப் பொருள் வர்த்தக சுற்றிவளைப்புக்கு எதிரான அரசியல் அழுத்தம் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் பிரதிபலன்களை இலங்கைக்குள்ளும் வெளியிலும் தற்போது காண முடிகின்றது. நாட்டின் எதிர்காலத்தைக் கருத்திற் கொண்டே நாம் இதுபோன்ற சிறந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம் என்றும் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.
பொதுக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.