இலங்கை பொலிஸ் பிரிவில் உள்ள உத்தியோகபுர்வ நாய்களின் எண்ணிக்கை குறைவாகவுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
உத்தியோகபுர்வ நாய்கள் சில ஓய்வு பெற்றும் நோய் வாய்ப்பட்டும் உள்ளதனால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
பொலிஸ் பிரிவுக்கு உத்தியோகபுர்வ நாய்கள் 250 காணப்பட்டதாகவும், தற்பொழுது அந்த எண்ணிக்கை 162 ஆக குறைந்துள்ளதாகவும் அவ்வதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த இடைவெளியை நிரப்புவதற்கு இவ்வருடத்தில் 45 நாய்களை நெதர்லாந்திலிருந்து இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் நிதிப் பற்றாக்குறை காரணமாக இந்த நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் ஒரு நாய்க்காக 10 லட்சம் ரூபா செலவிடவுள்ளதாகவும் குறித்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.