மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடைமையாற்றும் பொலிஸ் கொஸ்தாபல் ஒருவா் மாரடைப்பால் உயிரிழந்துள்ளாா். இந்த சம்பவம் இன்றையதினம்(16-02-2018) அதிகாலை இடம்பெற்றதாக பொலிஸாா் தெரிவித்தனா்.
இது தொடர்பில் தெரியவருவது….
மானிப்பாய் பொலீஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலீஸ் அதிகாரி இன்று(16) அதிகாலை 1.50 மணியளவில் தனக்கு நெஞ்சு வலிப்பதாக கடைமையிலிருந்த பொலீஸ் உத்தியோகத்தரிடம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து குறித்த பொலீஸ் உத்தியோகத்தார் மானிப்பாய் பொலீசாரினால் அவசரமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்டார்.
அழைத்து வரப்பட்ட பொலீஸ் உத்தியோகத்தர் யாழ் போதனா வைத்தியசாலையின் நோயாளர் அனுமதி பதிவறையில் பதிவினை மேற்கொள்ளும் பொது சரிந்து விழுந்தார்.
இதனையடுத்து அவரை பரிசோதித்த வைத்தியர் அவர் மாரடைப்பால் உயிரிழந்து விட்டார் என தெரிவித்துள்ளார்.
மாத்தளை பகுதியை சேர்ந்த 46 வயதுடைய லலித் மொகான் சந்திரசேன என்ற பொலீஸ் கொஸ்தாபலே இவ்வாறு மரணமடைந்துள்ளாா்.
இந்த மரணம் தொடர்பில் மானிப்பாய் பொலீசார் மேலதிக விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.