புதிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஒருவரின் கீழ் பொலிஸ் ஊடகப் பிரிவு நேற்று (01) முதல் செயற்படுவதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் பரிந்துரையின் கீழ் பதில் பொலிஸ் மா அதிபரினால் புதிய பொலிஸ் ஊடகப் பேச்சாளராக பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
புதிய ஊடகப் பேச்சாளர் நேற்று முதல் தனது பணியை பொறுப்பேற்றுள்ளதாகவும் தலைமையகம் மேலும் கூறியுள்ளது.
இதற்கு முன்னர் பொலிஸ் ஊடகப் பேச்சாளராக பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர செயற்பட்டார். புதிய அரசாங்கம் பதவிக்கு வந்ததன் பின்னர், கடந்த நவம்பர் மாதம் 27 ஆம் திகதி முதல் பொலிஸ் ஊடகப் பிரிவை உடன் அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தி வைத்திருந்தது.

