பொலிதீன், லன்ச்சீட் என்பனவற்றின் பாவனையை முற்றாகத் தடை செய்ய வேண்டும் என மத்திய சுற்றாடல் அதிகார சபை எடுத்துள்ள தீர்மானம் தவறானது என பொலிதீன் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அனுர விஜேதுங்க தெரிவித்துள்ளார்.
இந்த சட்டத்தினால் உற்பத்தியாளர்களும், நுகர்வோரும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மாற்றீடு முன்வைக்கப்படாமல் தடையை மாத்திரம் அறிவித்துள்ளதனால், மக்கள் பாரியளவு பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்துள்ளனர். குறிப்பாக நகர வாழ் மக்கள் பாரியளவு பாதிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமது சங்கத்துடன் எந்தவித கலந்துரையாடலும் மேற்கொள்ளாமல், மத்திய சுற்றாடல் அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. எமது நாட்டில் மாத்திரமல்ல இவ்வாறு பொலிதீன் பயன்படுத்துகின்றனர். அபிவிருத்தியடைந்த பல நாடுகளில் இந்த பொலிதீன் பயன்பாடு உள்ளது. அவர்கள் தங்களது நாட்டை இவற்றின் தீங்கிலிருந்து பாதுகாப்பாக வைத்துள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.