Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பொருட்களின் கையிருப்பு தொடர்பில் பிரச்சினை இல்லை

April 3, 2020
in News, Politics, World
0

அத்தியாவசிய பொருட்களின் கையிருப்பு தொடர்பில் பிரச்சினை இல்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்றற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அமைச்சரவை இணை பேச்சாளரும் அமைச்சருமான கலாநிதி ரமேஷ் பத்திரண இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையை கருத்திற் கொண்டு, அத்தியாவசிய பொருட்களின் கையிருப்பு தொடர்பில் பிரச்சினை இல்லை.

எதிர்வரும் நான்கு மாதங்களுக்குத் தேவையான அரிசி மரக்கறி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை உற்பத்தி செய்து விநியோகிப்பதற்கான வேலைத்திட்டத்தை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.

மேலும், எரிபொருள் மற்றும் மருந்துப் பொருட்கள் தவிர்ந்த ஏனைய பொருட்களின் இறக்குமதியை இரத்து செய்யவும் வரையறைக்கு உட்படுத்தவும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

இறக்குமதி பொருட்களுக்கான தட்டுப்பாட்டினை நிவர்த்திப்பதற்காக எதிர்வரும் 9ஆம் திகதி விசேட வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.

எதிர்வரும் காலத்தில் இலங்கையில் வலுவான உற்பத்தியை மேற்கொள்ளும் பொருட்டே அரசாங்கத்தால் மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

தமிழகத்தில் மேலும் 75 பேருக்கு கொரோனா!

Next Post

தனிமைப்படுத்தல் முகாமில் இருந்து 16 பேர் விடுவிப்பு!

Next Post

தனிமைப்படுத்தல் முகாமில் இருந்து 16 பேர் விடுவிப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures