பொய் பிரசாரங்களுக்கு ஏமாற வேண்டாம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கம்பளையில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘கொம்பனி வீதியில் குடிசை வீடுகளில் இருந்த அனைவருக்கும் மாடி வீடு திட்டத்தை அமைப்பதற்கு முதலீட்டாளர்களைக் கொண்டு வந்த போது, அது தொடர்பாக பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டு இரண்டு வருடங்கள் எனக்கு நீதிமன்றம் செல்ல வேண்டி ஏற்பட்டது.
எனினும், நான் அந்தத் திட்டத்தை ஆரம்பித்தேன். இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்பு, அந்த வீடுகளைப் பகிர்ந்தளித்து அவர்கள் ஒளிப்படம் எடுத்துக்கொள்கின்றனர்.
100 வீதமான முஸ்லிம் மக்களும் மஹிந்த ராஜபக்ஸவிற்கு எதிராக அன்று வாக்களித்தனர்.
எனினும், இன்று என்ன நடந்துள்ளது? அனைத்து வியாபாரங்களும் வீழ்ச்சியடைந்துள்ளன. இந்த பொய் பிரசாரங்களுக்கு ஏமாற வேண்டாம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

