முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய தொடர்பில் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவினால் முன்வைக்கப்பட்ட கருத்து அவரது தனிப்பட்ட கருத்து என்றும் தனிப்பட்ட ஒருவரின் கருத்து ஒரு பொழுதும் பலரது முடிவாக மாறாது என்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
முன்னாள் இராணுவத் தளபதிக்கு எதிராக பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்த கருத்து தொடர்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இவர்கள் இருவருக்கும் இடையில் உள்ள கருத்து வேறுபாடு காரணமாகவே அவர் அக்கருத்தை வெளியிட்டு இருப்பதாகவும், அவர்கள் இருவருக்கும் இடையில் இருக்கும் கருத்து வேறுபாட்டை ஜனாதிபதியின் தலையீட்டில் சமரசம் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.