Saturday, August 23, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான போராட்டத்தின் நாயகர்கள் நானே – சுமந்திரன்

August 20, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
யாழ்ப்பாணம் தவிர ஏனைய இடங்களில் ஹர்த்தால் வெற்றியளித்துள்ளது ; சுமந்திரன்

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான போராட்டத்தின் நாயகர்களே நாங்கள்தான் என இலங்கை தமிழ் அரசு கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

யாழ்ப்பாணத்தில் திங்கட்கிழமை (18) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது, கடந்த காலங்களில் சுமந்திரன் போராட்டங்களை முன்னெடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் உள்ளதாக கேள்வியெழுப்பியபோதே அவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்,  

பலருக்கு ஞாபக மறதிகள் இருக்கலாம் அல்லது தமது அரசியலுக்காக ஞாபகம் இருந்தும் மறந்துபோனது போல குற்றச்சாட்டுக்களை கூறலாம்.  

நாம் கடந்த காலங்களிலும் பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடாத்தி இருந்தோம். வலி. வடக்கில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விடுவிக்கக் கோரி போராட்டங்களை முன்னெடுத்தோம். 

காணி சுவீகரிப்புக்கு எதிராக சட்ட போராட்டங்களையும் முன்னெடுத்தோம். தற்போதும் அந்த வழக்குகள் விசாரணையில் உள்ளன. 

பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க கோரி கொழும்பில் இருந்து ஹம்பாந்தோட்டையில் உள்ள மஹிந்த ராஜபக்ஷவின் சொந்த ஊரான தங்காலை வரையில் பேரணியாக சென்றோம். 

பேரணிக்காக ஒழுங்கு செய்யப்பட்ட வாகனத்தை காலி முகத்திடலில் வைத்து பொலிஸார் கடத்திச் சென்றனர். அதனை போராடி மீட்டே எமது பேரணியை முன்னெடுத்தோம். 

P2P என அழைக்கப்பட்ட பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான போராட்டத்தை முன்னின்று பொலிகண்டி வரையில் கொண்டுவந்து சேர்த்தது நாமே. 

அன்றைக்கு சுமந்திரனும் சாணக்கியனும் இல்லை என்றால் போராட்டம் பொத்துவிலுடன் முடிக்கப்பட்டு இருக்கும் என அன்றே பலர் ஊடக சந்திப்புக்களில் கூட கூறியிருந்தார்கள். 

நாங்கள்தான் பொலிஸ் தடைகளை உடைத்து பொலிகண்டி வரை பேரெழுச்சியாக பேரணி சென்றடைய முன்நின்றோம். அதற்காக பொலிஸ் விசாரணைகளை கூட எதிர்கொண்டோம். 

இந்த ஹர்த்தால் கூட ஒரு அடையாள போராட்டமே. வடக்கு, கிழக்கில் இருந்து இராணுவ முகாம்கள் முற்றாக அகற்றப்படும் வரையில் நாம் தொடர் போராட்டங்களை எதிர்காலத்தில் முன்னெடுப்போம் என்றார். 

Previous Post

பரந்தன் வட்டுவாகல் பாலத்தை மீண்டும் நிர்மாணிக்க அரசாங்கம் நடவடிக்கை

Next Post

‘மஞ்சும்மல் பொய்ஸ்’ இயக்குநர் இயக்கத்தில் உருவாகும்’ பாலன் ‘

Next Post
‘மஞ்சும்மல் பொய்ஸ்’ இயக்குநர் இயக்கத்தில் உருவாகும்’ பாலன் ‘

'மஞ்சும்மல் பொய்ஸ்' இயக்குநர் இயக்கத்தில் உருவாகும்' பாலன் '

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures