தலைமைத்துவ சபை ஒன்றின் மூலம் எதிர்வரும் பொதுத் தேர்தலை வழிநடத்த ஐக்கிய தேசியக் கட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் ஆலோசனை வழங்கியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கட்சியின் சுமார் 30 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதுதொடர்பில் இன்று கலந்துரையாடியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த தலைமைத்துவ சபையில் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு முன்னுரிமை வழங்குமாறும் சிரேஸ்ட உறுப்பினர்கள் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போதைய தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கோ, சஜித் பிரேமதாசவுக்கோ மாத்திரம் பொதுத் தேர்தலை வழிநடத்தும் தலைமைத்துவத்தை வழங்காது தலைமைத்துவ சபையொன்றின் ஊடாக பொதுத் தேர்தலை வழிநடத்துவதே அதிக வாய்ப்பானது எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

