பிரச்சினைகளைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள தெரியாத ஒரு அரசாங்கமே ஆட்சியில் உள்ளதாகவும் இதனால், பொதுமக்கள் பாரிய நெருக்கடிகளை எதிர் கொண்டு வருவதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ரயில்வே ஊழியர்களின் வேலை நிறுத்தம் உட்பட வெவ்வேறு துறைகளின் தொடர்ச்சியான வேலை நிறுத்தங்களுக்கு காரணம் அரசாங்கத்தின் செயற்றிறன் இன்மையே எனவும் அவர் கூறியுள்ளார்.
பெல்லன்வில ரஜமகா விகாரையில் இடம்பெற்ற மத நிகழ்வின் பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

