இலங்கையின் பல வங்கிகள், தங்களின் பெயரில் தோற்றமளிக்கும் போலி இணையதளங்கள் மூலம் தனிப்பட்ட மற்றும் நிதி தொடர்பான தகவல்கள் திருடப்படுவதற்கான அபாயம் இருப்பதாக வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளன.
இந்த வாரம் வெளியிடப்பட்ட அறிவிப்புகளின்படி, மோசடிகள் மின்னஞ்சல் மற்றும் குறுந்தகவல் வழியாக போலியான இணைப்புகளை அனுப்பி, வாடிக்கையாளர்களை மாற்றிய எழுத்துக்கள் அல்லது விசித்திர குறியீடுகள் கொண்ட இணையதளங்களுக்கு அழைத்துச் செல்கின்றனர்.
வாடிக்கையாளர்கள் இத்தகைய இணைப்புகளை அழுத்தாமல், அதிகாரப்பூர்வ இணைய முகவரிகளை நேரடியாக தட்டச்சு (Type) செய்து பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், உள்நுழைவு விபரங்கள் போன்ற நுணுக்கமான தகவல்களை உள்ளிடும் முன் இணைய முகவரியை நன்கு சரிபார்க்கவும், சந்தேகத்துக்கிடமான செயல்பாடுகளை உடனடியாக வங்கியிடம் தெரிவிக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.