கிளிநொச்சியில் பொங்கல் விழாவும் பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகளும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றன.
சுடர் ஒளி விளையாட்டு கழகமும், தயா சன சமூக நிலையமும் இணைந்து நடத்திய இவ்விழா, கிளிநொச்சி, பன்னங்கண்டியிலுள்ள சுடர் ஒளி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
இதன்போது பொங்கல் விழா இடம்பெற்றதுடன், பாரம்பரிய விளையாட்டுக்கள் நடைபெற்று பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், கரைச்சி பிரதேச சபை தவிசாளர் அ.வேழமாலிகிதன், பிரதேச சபை உறுப்பினர் அ.சத்தியானந்தம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

