பிரபுதேவா நடிப்பில் உருவாகி இருக்கும் தேள் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
பிரபுதேவாவை திரைகளில் பார்த்து நீண்ட காலமாகிவிட்ட வருத்தம் அவரது ரசிகர்களுக்கு உள்ளது. கடைசியாக தமிழில் நடித்த தேவி-2 படம் 2019-ல் வெளியானது. பல வருடங்களாக திரைக்கு வராமல் முடங்கி இருந்த பொன்மாணிக்கவேல் படம் தியேட்டரில் ரிலீசாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், சமீபத்தில் ஓ.டி.டி. தளத்தில் வெளியிட்டுவிட்டனர்.
அதன்பிறகு பிரபுதேவா நடித்துள்ள தேள் படம் கடந்த வாரம் தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவித்து அதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர். ரசிகர்களும் தியேட்டரில் தேள் படத்தை பார்க்கும் ஆவலோடு இருந்தனர். ஆனால் கடைசி நேரத்தில் தேள் படம் ரிலீசை தள்ளிவைத்துவிட்டது.
அதன்பிறகு இப்படம் எப்பொழுது வெளியாகும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் தேள் திரைப்படம் ஜனவரி 14ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளனர்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]