ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வன் எழுதிய பயங்கரவாதி நாவலின் வெளியீடு எதிர்வரும் 15ஆம் திகதி – தைப்பொங்கல் தினத்தன்று கிளிநொச்சியில் இடம்பெறவுள்ளது.
நடுகல் நாவல் வாயிலாக பரவலான கவனத்தை ஈர்த்த தீபச்செல்வனின் இரண்டாவது நாவலான பயங்கரவாதி வெளியீட்டு நிகழ்வை கரைச்சிப் பிரதேச சபையின் பண்பாட்டுப் பேரவை ஏற்பாடு செய்துள்ளது.
கரைச்சிப் பிரதேச சபை அரங்கில் 15ஆம் திகதி 3மணிக்கு இடம்பெறவுள்ள நிகழ்வில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.