சாத்தியப்பாடில்லாத விடயங்கள் குறித்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் என்ற வகையில் கருத்துத் தெரிவிக்க தன்னால் முடியாது என அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.
அமைச்சர் பைஸர் முஸ்தபாவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஐ.தே.க.யின் சில உறுப்பினர்களும் ஆதரவாக வாக்களிக்கப் போவதாக கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன. இது குறித்து ஸ்ரீ ல.சு.க.யின் நிலைப்பாடு என்னவென அவரிடம் ஊடகவியலாளர் ஒருவர் வினவிய போதே இவ்வாறு கூறினார்.
ஊடகங்களில் பெயர் போட்டுக் கொள்வதற்காக ஒருசிலர் முயற்சிக்கின்றனர். இவ்வாறானவர்களே பொறுப்பற்ற முறையில் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
அமைச்சர் பைஸர் முஸ்தபாவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நடைபெறாத ஒன்று. நடைபெறாத ஒன்று குறித்து யாரோ எதையோ சொன்னதற்கு தான் பதிலளிக்கத் தயாரில்லையெனவும் துமிந்த திஸாநாயக்க மேலும் கூறினார்