பேஸ்புக் பயனாளிகளின் தகவல் திருடப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து பதிலளித்துள்ள மார்க் ஜுக்கர்பெர் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு, அமெரிக்காவில் நடைப்பெற்ற அதிபர் தேர்தலில், டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். டிரம்பின் வெற்றிக்கு உதவுயது ஃபேஸ்புக் தான் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. லண்டனைச் சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா என்னும் நிறுவனத்திற்குப் பேஸ்புக் வாடிக்கையாளர்களின் தகவல்களை அந்நிறுவனம் அளித்தாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து ஐரோப்பிய மற்றும் அமெரிக்கப் பேஸ்புக் நிர்வாகம், ஃபேஸ்புக் நிறுவனர், மார்க் ஜூக்கர்பெர்க்கை விசாரணைக்கு அழைத்துள்ளது. சுமார் 50 மில்லியன் யூசர்களின் தகவல்களை அந்நிறுவனம், நேர்மையற்ற முறையில் தந்தாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தகவல் பிரிட்டன் தொலைக்காட்சி, சேனல் நியூஸ் 4 ல் ப்ரேக்கிங் நியூஸாக ஒளிப்பரப்பானது. அதன் பின்பு, வாட்ஸ் அப் செயலின் இணை நிறுவனர், பிரைன் ஆகடனின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் “இது ஃபேஸ்புக் செயலியை டெலிட் செய்ய வேண்டிய நேரம்” என்று பதிவிட்டு மீண்டும் அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தினார்.
இந்த குற்றச் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க், தனது முகநூல் பக்கத்தின் மூலம் பதில் அளித்துள்ள மார்க், முதலில் அனைவரிடமும் பகிரங்கமாக மன்னிப்பு கோருவதாக தெரிவித்துள்ளார். நம்பிக்கை மீறல் நடைபெற்றுள்ளது . “ இது குறித்து தான் மிகவும் வருத்தம் அடைகிறேன். நேர்மையற்ற செயலிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். இதுக்குறித்து விசாரணை நடத்தவும் மகிழ்சியுடன் நான் தயாராக இருக்கிறேன்.
இனி வரும் காலங்களில் செயலிகள் யூசர்களின் தகவல்களை பெறுவது மிக கட்டுப்படுத்தப்படும். உங்கள் தகவல்களை பாதுகாக்கும் பொறுப்பு எங்களுக்கு உள்ளது.
எங்களால் பாதுகாக்க முடியவில்லை என்றால் உங்களுக்கு சேவையாற்றும் தகுதியை நாங்கள் இழப்போம். ஃபேஸ்புக்கை தொடங்கியது நான்தான் எனவே இதில் என்ன நடந்தாலும் நான்தான் பொறுப்பு” என்று மார்க் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வு உலகம் முழுவதும் உள்ள பேஸ்புக் பயனாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.