முகநூல் மூலம் அறிமுகமாகியவர்களினால் இரத்தினபுரி, துறைக்கந்த பிரதேசத்தில் ஏற்பாடு செய்திருந்த இரவு களியாட்ட விடுதியொன்றை முற்றுகையிட்ட பொலிஸார் 36 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸார் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 12 பேர் பெண்கள் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 20 இற்கும் 30 இற்கும் இடைப்பட்டவர்கள் காணப்படுவதாகவும், இவர்கள் இரத்தினபுரி, களுத்தறை, கல்கிஸ்ஸை, குருணாகல், வத்தளை, மாத்தறை மற்றும் மொனராகலை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் ஊடகப் பிரிவு மேலும் அறிவித்துள்ளது.