நேற்று முதல் நிலவிவரும் கடும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக பேருவளையின் பல பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதாக எமது அலுவலக செய்தியாளர் தெரிவித்தார்.
பேருவளை பள்ளி வீதி, சமத் மாவத்தை போன்ற பிரதேசங்கள் உள்ளிட்ட பல பிரதேசங்களில் சுமார் 150 வீடுகள் இந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களின் அத்தியாவசிய தேவைகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என பிரதேசவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.