பேருந்து கட்டணங்களை குறைப்பது தொடர்பில் பேருந்துகள் சங்கங்கள் மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது
இன்று (புதன்கிழமை) காலை 10 மணியளவில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இன்றைய சந்திப்பு குறித்து பேருந்து சங்கங்களுக்கு போக்குவரத்து ஆணைக்குழு தொலைபேசி ஊடாக அழைப்பு விடுத்ததாக, அந்த சங்கத்தின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை சீர்திருத்தத்திற்கு அமைய டீசலின் விலை 5 ரூபாவினால் குறைக்கப்பட்டது
இதன்காரணமாக பேருந்து கட்டணங்களும் குறைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வந்தன.
இந்தநிலையில் இன்றைய இந்த சந்திப்பில் பேருந்து கட்டணங்களின் விலைகள் குறைக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக, தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் பிரதம செயலாளர் அஞ்ஜன ப்ரியன்ஜித் தெரிவித்துள்ளார்

