யாழ்ப்பாண பல்கலைக்கழக வேந்தர் தகைசார் – வரலாற்றுத்துறை பேராசிரியர் சி. பத்மநாதன் எழுதிய திருக்கேதீஸ்வரம், திருக்கோணேஸ்வரம் பற்றிய மூன்று ஆய்வு நூல்களின் வெளியீட்டு விழா இன்று புதன்கிழமை (ஒக் 19) காலை 9.30 மணியளவில் யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நடைபெற்றது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக இந்து கற்கைகள் பீடத்தின் இந்து நாகரிகத்துறை ஏற்பாட்டில் துணைவேந்தர் பேராசிரியர் சி. ஸ்ரீ சற்குணராஜா தலைமையில் இடம்பெற்ற இந்த நூல் வெளியீட்டு விழாவில், யாழ். பல்கலைக்கழக தமிழ்த்துறை முன்னாள் பேராசிரியர் சி.சிவலிங்கராஜா, வரலாற்றுத்துறை முன்னாள் பேராசிரியர் ப.புஸ்பரட்ணம், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளரும் மருத்துவருமான த.சத்தியமூர்த்தி ஆகியோர் கருத்துரைகளை வழங்கினர். தொடர்ந்து நூலாசிரியர் சி.பத்மநாதன் இந்து கற்கைகள் பீடத்தினரால் கௌரவிக்கப்பட்டார்.
நூலாசிரியரும் பேராசிரியருமான சி.பத்மநாதனால் மூன்று நூல்களும் வெளியிட்டு வைக்கப்பட்டதுடன், நூலின் பிரதிகளை யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி.ஸ்ரீசற்குணராஜா, தமிழ்த்துறை முன்னாள் பேராசிரியர் சி.சிவலிங்கராஜா, வரலாற்றுத்துறை முன்னாள் பேராசிரியர் ப. புஸ்பரட்ணம், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளரும் மருத்துவருமான த. சத்தியமூர்த்தி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.



