இன்று நள்ளிரவு முதல் வேலைநிறுத்த போராட்டம் ஒன்றில் ஈடுபடவுள்ள புகையிரத தொழிற்சங்க ஊழியர்களுக்கும் போக்குவரத்து உயரதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல் எவ்வித தீர்மானங்களும் எட்டப்படாத நிலையில் முடிவுக்கு வந்துள்ளது.
இன்று (08) காலை 10 மணியளவில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலுக்கு போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் பிரதி அமைச்சர் அசோக் அபேசிங்க மற்றும் போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சரின் செயலாளர் உட்பட உயரதிகாரிகளும் தொழிற்சங்க ஊழியர்களும் கலந்து கொண்டனர்.
எவ்வாறாயினும் இந்த கலந்துரையாடலில் தொழிற்சங்க ஊழியர்களின் வேண்டுகோளுக்கு சாதமாக எவ்வித முடிவும் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
எனவே இன்று நள்ளிரவு முதல் வேலைநிறுத்த போராட்டத்தை மேற்கொள்ள தொழிற்சங்க ஊழியர்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.