ஈரானுடன் நிபந்தனையற்ற சமாதானப் பேச்சுவார்த்தைக்கு தான் தயார் என அமெரிக்கா ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபைக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையினூடாக இந்த பேச்சுவார்த்தையை முன்னெடுக்க தான் எதிர்பார்ப்பதாகவும் அமெரிக்கா ஐ.நா.விடம் தெரிவித்துள்ளதாகவும் அல் ஜெஸீரா செய்திச் சேவை குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி ஈரானின் அணுவாயுத திட்டம் குறித்து புதிய யோசனையொன்றை தயாரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்காவின் இந்தக் கருத்துக் குறித்து இதுவரையில் ஈரான் எந்த பதிலையும் வெளியிடவில்லையெனவும் கூறப்படுகின்றது.
தான் ஈராக்கிலுள்ள அமெரிக்க இராணுவத் தளத்தின் மீது தாக்குதல் நடாத்தியது, தமது சுய பாதுகாப்பைக் கருத்தில் கொண்ட ஒரு நடவடிக்கையாகும் என ஈரான் ஐ.நா.வின் பாதுகாப்புச் சபைக்குத் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

