பிரான்சில் பெண்களுக்கு எதிரான பாலியன் வண்கொடுமைகளுக்கு எதிராக அடுத்த ஐந்தாண்டு திட்டம் நடைமுறை படுத்தப்படும் என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அறிவித்துள்ளார்.
பெண்களுக்கு எதிரான பாலியல் தாக்குதல் மற்றும் கொடுமைகள் குறித்து முதன் முறையாக இம்மானுவல் மக்ரோன், நேற்று சர்வதேச பெண்கள் மீதான பாலியல் கொடுமைகளுக்கு எதிர்ப்பு நாளில் எலிசேயில் வைத்து உரையாற்றியிருந்தார். அதன் போது, கடந்த 2016 ஆம் ஆண்டில் 123 பெண்கள், அவர்களது முன்னால் காதலனாலோ, கணவராலோ கொல்லப்பட்டுள்ளனர். ஒவ்வொரு மூன்றாவது நாளிலும் ஒரு பெண் இதுபோன்ற பாலியல் காரணங்களுக்காக கொல்லப்படுகின்றனர். தவிர 2,25,000 பெண்கள் பாலியன் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர். இவர்களில் ஐந்தில் ஒருவருக்கும் குறைவான அளவிலேயே வழக்குகள் பதிவு செய்கின்றனர்.’ என தெரிவித்துள்ளார்.
தவிர, பெண்களுக்கும் சம உரிமை அளிக்கப்படவேண்டும். அதற்கான நடவடிக்கைகள் தொடர்ச்சியாக எடுக்கப்பட்டுக்கொண்டே இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார். தவிர, இதற்கான நிதி ஒதுக்கீடும் வரும் 2018 ஆம் ஆண்டில் அதிகரிக்கப்படும் எனவும் குறிப்பிட்டார். நேற்று சனிக்கிழமை நண்கபலில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. அதைத் தொடர்ந்து நேற்றைய நாளில் பல பெண்கள் அமைப்பு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.