Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பூமிக்கும் நிலவுக்கும் விரைவில் – பிரேக் அப்

October 6, 2018
in News, Politics, World
0

மனிதக் கலாசாரத்தில் நிலவுக்குப் பெரும் பங்குண்டு. இனி அவையுமிருக்காது. நிலவொளியில் கடலோரத்தில் கொஞ்சும் காதல் நடைகள், இரவை ரசித்துப் பேசும் கவிதைகள் பேச என்று எதையும் செய்யமுடியாது. எப்போது?கற்பனை செய்துபாருங்கள். பூமிக்கு நிலாவே இல்லை. என்னவாகும்?

சூரிய சந்திர கிரகணங்கள் நிகழவே நிகழாது. நமது நாட்காட்டிகளில் மாதங்களே இருக்காது. மாதங்களைத் திங்களென்று நாம் சொன்னதே வானிலிருக்கும் அந்தத் திங்களை வைத்து நாட்களைக் கணக்கிடுவதால்தான். அதுவே இல்லையென்றால் மாதங்களை எப்படிக் கணக்கிடுவது? அதனால் மாதங்களே இருக்காது.

நிலா இல்லாமல் பூமிக்கு அப்பால் பயணிக்கும் வகையில் பூமிக்கு வெகு அருகில் எந்தக் கோளுமே இருக்காது. சொல்லப்போனால் தூரத்திலிருக்கும் கிரகங்களுக்கு மனிதர்கள் கண்டுபிடிக்கும் வரை நாம் விண்வெளியில் வீர சாகசங்கள் புரிவதை நினைத்துப் பார்க்கக்கூட முடியாமல் போகலாம். அதுவரை ஸ்பேஸ் ரோவர்கள்தான்.
நிலவும், சூரியனுமே கடலலைகள் தோன்றுவதற்கான காரணிகள். நிலவில்லையென்றால் அலைகளே எழும்பாதென்றில்லை. ஆனால் இப்போதிருக்கும் வேகம் இருக்காது.

இன்னும் என்ன?

மனிதக் கலாசாரத்தில் நிலவுக்குப் பெரும் பங்குண்டு. அவையுமிருக்காது. நிலவொளியில் கடலோரத்தில் கொஞ்சும் காதல் நடைகள், இரவை ரசித்துப் பேசும் கவிதைகள் பேச என்று எதையும் செய்யமுடியாது.ஆனால், மனிதர்கள் உட்பட அனைத்துவகை உயிரினங்களும் அனுபவிக்கப்போகும் மிகப்பெரிய மாற்றம் என்னவாக இருக்கும் தெரியுமா! நாள் சுழற்சியின் நீளம் குறைந்துவிடும். நம் நாட்கள் 24 மணிநேரமாக இருக்காது. பல பில்லியன் ஆண்டுகளுக்குமுன் மிக இளமையான கோளாக பூமி இருந்தபோது மிக வேகமாகச் சுழன்று கொண்டிருந்தது. அச்சமயத்தில் ஒரு நாளுக்கான நேரம் வெறும் பத்து மணிநேரம் மட்டுமே. நிலவோடு பூமிக்கு இருக்கும் ஈர்ப்பு விசைதான் சூரியனோடு பூமிக்கு இருக்கும் ஈர்ப்புவிசையின் வேகத்தைக் கட்டுப்படுத்திச் சம அளவில் வைத்திருக்கிறது. நிலா இல்லையென்றால் பூமி மீண்டும் பழையபடி அதிவேகமாகச் சுழலத் தொடங்கிவிடும். அட எல்லாம் சரி, இப்போது ஏன் இதைச் சொல்லவேண்டும்?ஏனென்றால் நம் நிலவு நம்மைவிட்டுப் பிரிந்துகொண்டிருக்கிறது. பத்து மணிநேரம் மட்டுமே கொண்ட நாளை வாழ்வதைக் கற்பனை செய்துகொள்ளுங்கள். ஒருவேளை இது நடக்கும்வரை மனித இனம் அழியாமலிருந்தால் நமது வருங்காலத் தலைமுறைகள் அந்த வாழ்க்கையை வாழவேண்டி வரலாம்.

பூமியைச் சுற்றிக்கொண்டிருக்கும் நிலவின் வட்டப்பாதை பெரிதாகிக் கொண்டேயிருக்கிறது. அதுவும் வருடத்துக்கு 37.8 செ.மீ என்ற விகிதத்தில். அது விலகிச் செல்வதால், சூரியனை நோக்கிச் செல்கிறதென்று அர்த்தமில்லை. ஆனால், பூமியிலிருந்து தொலைவாகிக் கொண்டிருக்கிறது. பூமியிலிருந்து நிலா விலகிக் கொண்டிருப்பதால் இன்றிலிருந்து 100 வருடங்கள் கழித்து ஒரு நாளின் கால அளவு 2 மில்லி செகண்டுகள் அதிகமாகியிருக்கும். இதே செயற்பாடு சில பில்லியன் ஆண்டுகளுக்குமுன் நடைபெற்றது. அப்போது பூமியின் ஈர்ப்பு விசை நிலவின் சுழற்சி வேகத்தைக் குறைத்து அதன் ஒருபுறம் மட்டுமே பூமியை நோக்கி இருக்குமாறு நிலைகொள்ளச் செய்தது. இதை டைடல் லாக்கிங் (Tidal Locking) என்று சொல்வார்கள். இப்படி பூமியிடம் நிலைகொள்ள நிலவுக்குச் சில பத்து மில்லியன் ஆண்டுகளே போதுமானதாக இருந்தது. ஈர்ப்புவிசையின் மாற்றங்களைக் கண்டறிவதில் கணிதக் கோட்பாடுகளே பெரிதும் உதவியுள்ளது.அத்தகைய கணிதக் கோட்பாடுகள் மூலமாக இதை முதலில் கண்டுபிடித்தவர் பரிணாமத்தின் தந்தை சார்லஸ் டார்வினின் மகன் ஜியார்ஜ் ஹோவர்டு டார்வின்.

பூமி கடலாகவும், ஓரளவு வளிமண்டத்திலும் திரவக் கூறுகளைக் கொண்டுள்ளது. அவை நிலா மற்றும் சூரியனின் ஈர்ப்பு சக்தியால் எளிமையாகத் திசைமாறிக் கொண்டேயிருக்கும். அது பூமியின் நிறையைச் சமநிலையில் வைத்திருக்காமல் இடம் மாற்றிக்கொண்டிருக்கிறது. இந்த இடமாறுதல்கள் தொடர்ச்சியாகவும் மிக மெல்லியதாகவும் அதிர்வலைகளை உருவாக்கிக் கொண்டேயிருக்கும். அது நிலவின் மீதான பூமியின் ஈர்ப்பு விசையைத் தொந்தரவு செய்கிறது. இந்தத் தொந்தரவால் நிலவின் சுற்றுவட்டப் பாதையுடைய ஆரம் பெரிதாகிக் கொண்டிருக்கிறது. இந்த இடைஞ்சல்கள் நிலவின் சுற்றுவட்டப்பாதையைப் பெரிதாக்கிக் கொண்டிருக்கிறதே தவிர அதன் சுற்றுவட்டப் பாதையிலிருந்து விலக்கவில்லை. ஆனால், தொடர்ச்சியாக ஆண்டுக்கு 38.7கி.மீ என்ற விகிதத்தில் விலகிச் சென்றுகொண்டிருக்கும் நிலா குறிப்பிட்ட தூரத்தைத் தாண்டினால் மொத்தமாக விலகிவிடவும் வாய்ப்பிருக்கலாம் என்று தோன்றுகிறது. தலைகீழ் சதுர விதிப்படிப் பார்த்தால் அதற்கு வாய்ப்புகளும் இருக்கின்றது. 14-ம் நூற்றாண்டில் ஜான் டம்பிள்டன் என்பவரால் முன்வைக்கப்பட்டது இந்தத் தலைகீழ் சதுர விதி. அதாவது, இரண்டு பொருள்கள் அருகருகே இருக்கின்றன. அவற்றுக்கு இடையிலிருக்கும் இடைவெளியைப்போல் பத்து மடங்கு இடைவெளி அவற்றுக்கிடையில் உருவானால் இரண்டுக்கும் இடையிலான ஈர்ப்புவிசை 10*10 என்ற கணக்கில் குறையும். அதாவது பத்து மடங்கு விலகினால் நூறு மடங்கு ஈர்ப்புவிசையின் வேகம் குறையும். அதுதான் தலைகீழ் சதுர விதி. இதன்படி பார்த்தால் நிலா பூமியிலிருந்து 38.7கி.மீ விலகும்போது பூமியுடனான அதன் ஈர்ப்புவிசை வேகம் 38.7*38.7 என்ற விகிதத்தில் குறையத் தொடங்கும்.இப்படியாக விலகிக் கொண்டிருக்கும் நிலவின் தூரம் அதிகமாக ஆக பூமியில் நாளின் நேரமும் நீண்டுகொண்டே போகும். உதாரணமாக இப்போதே அதில் மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டு தானிருக்கிறது. 1972-ம் ஆண்டு 26-வது முறையாக ஒரு வருடத்துக்கான நேரத்தில் ஒரு நொடி கூடியது. இதைப்போல் மீண்டும் சில வருடங்கள் கழித்து இன்னொரு நொடி அதிகமாகும். கடலில் அலைகள் தளும்புவது போலவே நிலத்திலும் நிலவால் அதிர்வலைகள் தளும்பிக் கொண்டிருக்கின்றன. அந்த அதிர்வலைகள்தான் பூமியின் சுழற்சி வேகத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறது. பூமி-நிலவின் அதிர்வலைகளில் ஏற்படும் உராய்வுதான் அதற்குக் காரணம். நிலவு கொஞ்சம் கொஞ்சமாகத் தூரமாகச் செல்லச் செல்ல அதற்கு இதுவரை கிடைத்த சமநிலையான அதிர்வுகளில் மாற்றங்கள் நிகழ்கிறது. அப்படி நடப்பதால் ஈர்ப்புவிசை தொந்தரவு செய்யப்படுகிறது. அந்தச் சமயத்தில் பூமி நிலாவோடு டக் ஆஃப் வார் (Tug of war) நடத்தி நிலாவைத் தக்கவைத்துக்கொள்ள முயற்சிக்கும். அது பூமியின் வேகத்தைக் குறைத்து நாளை நீட்டிக்கும். ஆனால், தொடர்ச்சியாக விலகிக் கொண்டிருக்கும் நிலா மொத்தமாகச் சுழற்சி வட்டத்திலிருந்து விலகும் சமயத்தில் அந்த அதிர்வலைகளின் உராய்வு சுத்தமாக இல்லாமல் போகவே பூமியைக் கட்டுப்படுத்த எதுவுமிருக்காது. அதனால் சூரியனுக்கும் பூமிக்கும் இடையிலான ஈர்ப்பு விசை முழுவீச்சிலிருக்கும். பூமியின் சுழற்சி வேகமும் அதிகமாகும்.

இது பூமியின் சுழற்சி வேகத்தை அதிகப்படுத்தி 4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்ததைப்போல் நாள்களின் நேரத்தைக் குறைத்துவிடும். அதற்கு இன்னும் சில கோடி ஆண்டுகள் ஆகலாம். எதிர்காலத்தில் அப்படி நடப்பதற்கு நிலாவுக்கும் பூமிக்குமான உறவில் இப்போது ஏற்பட்டுக் கொண்டிருக்கும் இந்த விரிசலே காரணம். அந்த விரிசல் பிரேக் அப் வரை செல்லுமா? .

Previous Post

அன்று எல்.எம்.ஜீ. ரக துப்பாக்கி பயன்படுத்த திட்டம்- மஹிந்தவினால் அம்பலம்

Next Post

ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீன கடற்படையின் தளமாக மாறலாம்

Next Post

ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீன கடற்படையின் தளமாக மாறலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures