பாலஸ்தீனத்தில் 71 வயது முதியவர் ஒருவர், அங்குள்ள அல்-ஆக்ஸா மசூதியில் நூற்றுக்கணக்கான புறாக்கள் மற்றும் பூனைகளுக்கு 20 ஆண்டுகளுக்கு மேலாக உணவளிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
பாலஸ்தீனத்தின் அராரா பகுதியை சேர்ந்தவரான காஸன் யூனிஸ், தனது வீட்டில் இருந்து சிறிது தொலைவிலுள்ள அல்-ஆக்ஸா மசூதிக்கு வந்து பிரார்த்தனை நடத்தி வருகிறார். அவ்வாறு வரும் வேளையில், மசூதியில் இருக்கும் புறாக்கள், பூனைகளுக்கு 20 ஆண்டுகளுக்கும் மேலாக வாரத்துக்கு 5 நாள்களுக்கு உணவு அளித்து வருகிறார்.
முதியவர் காஸன் யூனிஸின் தாராள குணத்தை பாலஸ்தீன மக்கள் வெகுவாக புகழ்ந்து வருகின்றனர். முகமது நபிகளின் உதவியாளர்களில் ஒருவரான அபஹுராய்ரா, பூனைகள் மீது மிகுந்த பாசம் கொண்டவர். அவரின் பெயரை முதியவர் காஸன் யூனிஸினுக்கு சூட்டி பாலஸ்தீன மக்கள் அழைத்து வருகின்றனர்.

