Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

பூஜித் ஜெய­சுந்­த­ர­வின் செயற்­பா­டு­களை கடுமையாக விமர்சித்த ஜனாதிபதி

October 3, 2018
in News, Politics, World
0

பொலிஸ் மா அதி­பர் பூஜித் ஜெய­சுந்­த­ர­வின் செயற்­பா­டு­களை அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன கடு­மை­யாக விமர்­சித்­து ள்­ளார். சரத் பொன்­சேகா, அமைச்­ச­ர­வைக் கூட்­டுப் பொறுப்­பு­டன் நடக்­க­வில்லை என்­றும் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சுட்­டிக்­காட்­டி­யுள்­ளார் என்­றும் தெரி­ய­வ­ரு­கின்­றது.

அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யில் அரச தலை­வர் செய­ல­கத்­தில் அமைச்­ச­ர­வைக் கூட்­டம் நேற்று நடை­பெற்­றது.

நாட்­டின் சட்­டம் ஒழுங்கு விவ­கா­ரம் தொடர்­பில் கருத்­துத் தெரி­வித்த அரச தலை­வர், பொலிஸ் மா அதி­ப­ரின் செயற்­பா­டு­கள் கோமா­ளித்­த­ன­மாக அமைந்­துள்­ளன என்­றும், அரசை தர்­ம­சங்­க­டத்­துக்கு ஆளாக்­கு­கின்­றது என்­றும் குறிப்­பிட்­டுள்­ளார் எனத் தெரி­ய­வ­ரு­கின்­றது.

அவ­ரது செயற்­பா­டு­கள் அரச தலை­வ­ரான என்­னைத் தர்­ம­சங்­க­டத்­துக்­குள் தள்­ளி­யுள்­ளது. அதே­போன்று தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வும் தர்­ம­சங்­க­டத்­துக்கு உள்­ளா­கி­யுள்­ளார்.
இத்­த­கைய நிலமை தொடர்­வ­தற்கு அனு­ம­திக்க முடி­யாது. பொலி­ஸா­ரது

நட­வ­டிக்­கை­கள் ஒழுங்­கான முறை­யில் முன்­னெ­டுக்­கப்­பட வேண்­டி­யது அவ­சி­ய­மா­கும். இதற்­கேற்ற நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­ப­ட­வேண்­டும் என்று அரச தலை­வர் தெரி­வித்­துள்­ளார்.

அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன, முன்­னாள் பாது­காப்­புச் செய­லா­ளர் கோத்­த­பாய ராஜ­பக்ச ஆகி­யோரை கொல்­வ­தற்­குச் சதி இடம்­பெற்­றது ஏன்று தக­வல்­கள் வெளி­யா­கி­யுள்­ள­து­டன் அந்த விட­யத்­தில் குற்­றஞ்­சாட்­டப்­ப­டும் பிரதி பொலிஸ்மா அதி­பர் நாலக டி சில்­வா­வு­டன் பொலிஸ் மா அதி­பர் நட்­பு­ற­வைக் கொண்­டி­ருந்­தார் என்ற குற்­றச்­சாட்­டும் சுமத்­தப்­பட்­டி­ருந்­தது.
இந்த விட­யம் தொடர்­பில் தற்­போது குற்­றப்­பு­ல­னாய்­வுப் பொலி­ஸார் விசா­ர­ணை­களை நடத்தி வரு­கின்­ற­னர்.

இந்த விசா­ர­ணை­யில் பொலிஸ்மா அதி­ப­ரி­ட­மும் வாக்கு மூலம் பெற நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது என்­று­மு் தற்­போது தக­வல்­கள் வெளி­யா­கி­யுள்­ளன. இந்த நிலை­யி­லேயே அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன பொலிஸ் மா அதி­பர் மீது கடும் விமர்­ச­னத்தை முன்­வைத்­துள்­ளார்.

இதே­வேளை சட்­டம் ஒழுங்கு அமைச்சை அரச தலை­வர் மைத்­தி­ரி­பால தனது கட்­டுப்­பாட்­டின் கீழ் கொண்டு வர­வுள்­ளார் என்ற தக­வல்­க­ளும் வெளி­யா­கி­யி­ருந்­த­மை­யும் சுட்­டிக்­காட்­டத்­தக்­கது.

Previous Post

விகா­ரை­யின் கட்­டு­மா­னங்­களை உட­ன­டி­யாக இடை­நி­றுத்த உத்தரவு

Next Post

புலி உறுப்பினர்கள் நான்கு பேருக்கு 10 ஆண்டுகள் சிறை

Next Post

புலி உறுப்பினர்கள் நான்கு பேருக்கு 10 ஆண்டுகள் சிறை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures