நேபாள பிரதமர் புஸ்ப கமல் டகல் பிரச்சண்டா பூகம்பத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு உடனடி விஜயத்தினை மேற்கொண்டுள்ளார்.

மருத்துவ குழுவினர் நேபாள இராணுவத்தை சேர்ந்த 16 பேர் மீட்பு நடவடிக்கைகளிற்கான பொருட்கள் உபகரணங்களுடன் நேபாள பிரதமர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

உயிரிழப்புகள் சொத்துக்களிற்கு ஏற்பட்ட உதவிகள் குறித்து ஆழ்ந்த கவலையடைந்துள்ளதாக தெரிவித்துள்ள பிரதமர் தேடுதல் மீட்பு பணிகளில் சம்பந்தப்பட்ட அனைவரும் உதவவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.