புல்புல் புயல் தாக்க இருப்பதை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வங்கதேசத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
வங்க கடலில் உருவான புல்புல் புயல், அதி தீவிர புயலாக வலுவடைந்து மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசத் கடற்கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. இன்று மாலை அல்லது இரவு வங்கதேசத்தில் புயல் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது மணிக்கு 110 முதல் 120 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
அதே போன்று ஒடிசாவின் வடக்கு கடலோர மாவட்டங்களிலும் கன மழை முதல் அதிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் எச்சரிக்கப்பட்டிருந்த நிலையில், பல்வேறு இடங்களில் மரங்கள், மின்கங்கள் முறிந்து விழுந்துள்ளதால் சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது.

