Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

புலி­கள் இயக்­கம் தலை­தூக்­கா­மல் தடுக்க வேண்டும்

June 24, 2018
in News, Politics, World
0

முல்­லைத்­தீவு – ஒட்­டு­சுட்­டா­னில் விடு­த­லைப்­பு­லி­க­ளின் சீரு­டை­கள், கொடி மற்­றும் வெடி­பொ­ருள்­கள் என்­பன சிக்­கி­யுள்­ள­மை­யி­னூ­டாக வடக்­கின் நில­வ­ரம் மோச­ம­டைந்­துள்­ளதை அவ­தா­னிக்க முடி­கி­றது. அரசு இது விட­யத்­தில் உட­ன­டி­யா­கத் தலை­யிட்டு மீண்­டும் விடு­த­லைப் புலி­கள் இயக்­கம் தலை­தூக்­கா­ம­லிக்க நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும்.

அல்­லாது போனால் நாட்­டில் மீண்­டும் மோச­மான நிலமை ஏற்­ப­ட­லாம் என்று மகிந்த அணி அரசை எச்­ச­ரித்­துள்­ளது. ஒட்­டு­சுட்­டா­னி­லி­ருந்து புதுக்­கு­டி­யி­ருப்பு செல்­லும் வீதி­யில் நேற்று முன்­தி­னம் பய­ணித்­துக் கொண்­டி­ருந்த முச்­சக்­கர வண்­டி­யி­லி­ருந்து வெடி­பொ­ருள்­கள், விடு­த­லைப்­பு­லி­க­ளின் சீரு­டை­கள் மற்­றும் கொடி என்­பன கைப்­பற்­றப்­பட்ட விட­யம் தொடர்­பில் மகிந்த அணி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சிசிர ஜெயக்­கொடி மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

நாட்­டில் மூன்று தசாப்த கால­மாக நீடித்த போரி­னால் சகல சமூ­கங்­க­ளை­யும் சேர்ந்த மக்­கள் பாதிக்­கப்­பட்­ட­னர். எமது நாட்­டின் பொரு­ளா­தா­ரம் பின்­ன­டை­வைச் சந்­தித்­தது. முன்­னாள் அரச தலை­வர் மகிந்த தனது ஆட்சி காலத்­தில் முழு மூச்­சா­கப் போரை முடி­வுக்கு கொண்டு வந்­தார்.போர் நிறை­வுக்கு வந்த பின்­னர் வடக்­கில் ஜன­நா­ய­கத்தை நிலை­நி­றுத்­து­வ­தற்­காக வட­மா­காண சபைத் தேர்­தலை நடத்­தி­னார். அந்­தப் பிர­தேச மக்­க­ளின் சுதந்­தி­ர­மான வாழ்க்கை உறுதி செய்­யப்­பட்­ட­து­டன் கட்­டுக் கோப்­பான நிர்­வா­க­மும் முன்­னெ­டுக்­கப்­பட்டு வந்­தது. கடந்த ஆட்­சி­யில் பயங்­க­ர­வா­தம் தலை­தூக்­க­வில்லை.

நல்­லாட்சி அரசு ஆட்­சிக்கு வந்த பின்­னர் நாட்­டின் பாது­காப்பு உறு­திப்­பா­டற்ற நிலைக்­குத் தள்­ளப்­பட்­டுள்­ளது. பாதாள உல­கக் குழுக்­க­ளின் செயற்­பா­டு­கள் மலிந்­துள்­ளன. கொலை மற்­றும் கொள்­ளைச் சம்­ப­வங்­கள் அடிக்­கடி இடம்­பெற்று வரு­கி­றது. அர­சின் முறை­யற்ற நிர்­வா­கத்­தி­னா­லேயே இவ்­வா­றான நிலை ஏற்­பட்­டுள்­ளது.

இவ்­வா­றி­ருக்­கை­யில் வடக்­கில் காணி­கள் விடு­விக்­கப்­ப­டு­கின்­றன. மக்­க­ளின் காணி­கள் விடுக்­கப்­பட வேண்­டும். அதில் மாற்­றுக்­க­ருத்­தில்லை. அதற்கு முன்­னர் மக்­க­ளின் தேவை­க­ளைப் பூர்த்தி செய்­து­கொ­டுக்க வேண்­டும். மக்­க­ளின் வாழ்­வா­தா­ரம் கட்­டி­யெ­ழுப்­பப்­பட வேண்­டும். அது நடை­பெ­றா­த­போதே மக்­கள் பயங்­க­ர­வா­தத்­தின் பக்­கம் ஈர்க்­கப்­ப­டு­வர் – என்­றார்.

Previous Post

முத­ல­மைச்­சர் போட்­டி­யி­லி­ருந்து மாவை ஒதுங்­க­மாட்­டாரா?

Next Post

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான அஞ்சலோட்டப் போட்டி

Next Post
அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான அஞ்சலோட்டப் போட்டி

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான அஞ்சலோட்டப் போட்டி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures