புதிய ஜனநாயக மாக்சிச லெனின் கட்சியின் புரட்சிகர மே தின ஊர்வலம் இன்று வவுனியாவில் நடை பெற்றது.
வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்திற்கு முன்பாக ஆரம்பமான ஊர்வலம் பஜார் வீதியூடாக ஹொரவப்பொத்தானை வீதியூடாக ஏ9 வீதியைச் சென்றடைந்து, நகரசபை வீதியூடாக வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தைச் சென்றடைந்தது.
ஊர்வலத்தின் போது கல்வியை விற்பனைப் பண்டம் ஆக்காதே, சைட்டம் வேண்டாம், மக்களின் நிலங்களிருந்து இராணுவமே வெளியேறு, அத்தியாவசியப் பொருள்களின் விலைகளை குறை என பல்வேறு பாதாதைகளை தாங்கிய வண்ணம் பேரணியாக சென்றனர். அதன் பின்னர் கலாச்சார மண்டபத்தில் பொதுக்கூட்டமும் இடம்பெற்றது.