புத்த பிக்கு ஒருவர் பெண்களின் உள்ளாடைகளைத் திருடி செல்வது தொடர்பான கானொளி சி.சி.ரி.வி கமராவில் பதிவாகியுள்ளது.
தாய்லாந்த் சுபாபுரிப் பகுதியில் உள்ள வீடுகளில் பெண்களின் உள்ளாடைகள் தொடர்ச்சியாகக் காணாமல் போயுள்ளன. அதனால் அவற்றைக் கண்காணிப்பதற்கு துணிகளை காயப்போடும் இடத்தில் சி.சி.ரி.வி கமரா பொருத்தப்பட்டது.
அந்த சி.சி.ரி.வி கமராவில் புத்த பிக்கு ஒருவர் உள்ளாடைகளைத் திருடிச் செல்லும் காட்சி பதிவாகியுள்ளது. அது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.
அந்தப் பிக்கு உள ரீதியாகப் பாதிக்கப்பட்ட நபர் என்று அவர் சார்ந்த பிக்குகள் சிலர் தெரிவித்துள்ளனர்.