யாழ். மாநகர் குரூஸ் வீதியிலுள்ள வீடொன்றில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவத்தில் இரண்டரை பவுண் நகை உள்ளிட்ட பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
புத்தாண்டை முன்னிட்டு வீட்டில் உள்ளவர்கள் யாழ்.மரியன்னை தேவாலயத்தில் இடம்பெற்ற விசேட ஆராதனையில் கலந்துகொள்வதற்காக சென்றிருந்த போதே இந்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீட்டின் பின் பக்க கதவு உடைக்கப்பட்டு, உள்நுழைந்த திருட்டுக் கும்பல் வீட்டிலிருந்த இரண்டரைப் பவுண் நகை, பணம் மற்றும் பெறுமதியான பொருள்களைக் எடுத்துச் சென்றுள்ளனர்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளர் வழங்கிய முறைப்பாட்டிற்கு அமைய விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.