புத்தளம் – ஆணைமடுவவில் உணவகம் ஒன்று இன்று அதிகாலை தீக்கிரையாக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
முஸ்லிம் வர்த்தகரின் மதீனா எனும் உணவகமே இவ்வாறு தீ்க்கிரையாக்கப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டது.
இதில் உயிர் ஆபத்துக்கள் ஏதும் ஏற்படவில்லை எனவும் சேத விபரங்கள் குறித்து முழுமைான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை பேருவளை தர்கா வீதியில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்கதல் மேற்கொள்ளப்பட்டது. எனவும் கூறப்பட்டது.மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டனர்.