மாவனெல்ல பகுதியில் சட்டவிரோதமாக புதையல் தோண்டும் பணிகளில் ஈடுபட்ட மூவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
மாவனல்லை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் நேற்று (04) இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதுடன், அகழ்வுப் பணிகளுக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதேவேளை, போலியான தொல்பொருட்களை விற்பனை செய்யும் மோசடியில் ஈடுபட்டு வந்த சந்தேக நபர் ஒருவரை எம்பிலிபிட்டிய பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
அவரிடமிருந்த கறுப்பு தாமிரம் மற்றும் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சந்தேகநபர் இன்று எம்பிலிப்பிட்டிய நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]