ஹொரனை – மாலொஸ்ஸ ஆற்று பகுதியில் புதையல் பெறும் நோக்கில் அகழ்வில் ஈடுபட்டிருந்த 5 பேர் கைது பொலிஸாரால் செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நபர்கள் நேற்றைய தினம் கைதாகியுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 18 முதல் 34 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹொரனை மற்றும் மீட்டியாகொடை பகுதியைச்சேர்ந்த நபர்களே இவ்வாறு கைதாகியுள்ளனர்.
மேலும் குறித்த நபர்கள் நாளைய தினம் ஹொரனை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

