வவுனியா புதூர் பகுதியில் ஆயுத பையை கைவிட்டு சென்ற விடயம் தொடர்பாக பொலிஸார் மற்றும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரினரால் இதுவரை 23 பேர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
கடந்த ஜனவரி மாதம் 2 ஆம் திகதி இடம்பெற்ற இச்சம்பவத்துடன் பலர் கைது செய்யப்பட்டு வந்த நிலையில் கடந்த புதன்கிழமை அதிகாலை மன்னாரில் வைத்து மட்டக்களப்பை சேர்ந்த வேந்தன் என்பவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
குறித்த சம்பவத்தின் முக்கிய சூத்திரதாரியாக அடையாளம் காணப்பட்ட அவரிடம் தொடர்ந்தும் தீவிர விசாரணையை முடுக்கிவிட்டுள்ள கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மேலும் இருவரை கைது செய்து விசாரணைக்குட்படுத்தி வருகின்றனர்.
இந் நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்டவர்களில் இருந்து மதகுரு மற்றும் 5 சிங்களவர்களும் உள்ளடங்கியுள்ளதுடன் இவர்கள் வெளிநாடுகளுக்கு ஆட்கடத்தல் மற்றும் ஆயுத விற்பனையில் ஈடுபட்டு வருகின்றமையும் தெரியவந்துள்ளது.

