புத்தாண்டில் வளமான இலங்கைக்காக அனைத்து அரச ஊழியர்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற, அரச ஊழியர்கள் தமது பணிகளை ஆரம்பித்து உறுதிமொழி மேற்கொள்ளும் நிகழ்வில் கலந்து கொண்டு அரச ஊழியர்களின் மத்தியில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பொறுப்புக்களை தட்டிக்கழிக்க முடியாது

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
2023ஆம் ஆண்டு நாட்டிற்கான தமது பொறுப்புகளில் இருந்து எந்தவொரு தனிநபரும் தட்டிக்கழிக்க முடியாது.
நாட்டின் பொருளாதாரத்திற்கு இது ஒரு முக்கியமான ஆண்டாக இருப்பதால் பொறுப்புகளில் இருந்து யாரும் தட்டிக்கழிக்க முடியாது.
புத்தாண்டில் வளமான இலங்கைக்காக அனைத்து அரச ஊழியர்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.
நமது பணி நேரம் 8 மணித்தியாலங்களுக்கு மட்டுப்படுத்தப்படுவதில்லை. நமது பணிகள் வாரத்தில் 5 நாட்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படுவதில்லை.
2023 ஆம் ஆண்டின் இறுதிக்குள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் நாட்டை இயல்பு நிலைக்குக் கொண்டு வருவதற்கும் புதிய வழிமுறைகளை அறிமுகப்படுத்தி, முழு அரசாங்கமும் ஒரே பொறிமுறையாகச் செயல்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.