யாழ்ப்பாணம் – அரியாலை பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
இன்று மாலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததுடன், மற்றுமொரு இளைஞர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
இதில், யாழ். ஈச்சமோட்டைப் பகுதியைச் சேர்ந்த ஏ. ராவின் (வயது 24) மற்றும் கே.சுதர்சன் (வயது 33) ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர்.
மணியம் தோட்டம் வீதி வழியாக மோட்டார் சைக்கிளில் இரு இளைஞர்களும் சென்றுகொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மதிலுடன் மோதுண்டதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த இரு இளைஞர்களின் சடலமும் யாழ்.போதனா வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் யாழ். பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.