முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரிக்கு முன்பாக புலிக்கொடி பறக்கவிடப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு பாடசாலைக்கு முன்பாக உள்ள மின்கம்பத்தில் சிவப்பு சீலையிலே கீறப்பட்டு தமிழீழம் எங்கள் தாயடா என எழுதப்பட்டு குறித்த புலிக்கொடி பறக்கவிடப்பட்டுள்ளது.
இன்று காலை குறித்த புலிக்கொடி பறந்ததை அவதானித்தவர்கள் புதுக்குடியிருப்பு பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதை தொடர்ந்து புதுக்குடியிருப்பு பொலிசார் குறித்த புலிக்கொடியை அகற்றியதோடு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்