பாராளுமன்றத் தேர்தல் 2019 ஆம் ஆண்டின் புதிய வாக்காளர் இடாப்பின் பிரகாரம் நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு தகவல்கள் தெரிவித்துள்ளன.
எதிர்வரும் பெப்ரவரி 24 ஆம் திகதி புதிய வாக்காளர் இடாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கையை முன்னெடுக்க ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இவ்வாறு உறுதிப்படுத்தியதன் பின்னர் நாட்டில் நடைபெறும் எந்தவொரு தேர்தலும் புதிய வாக்காளர் இடாப்பின்படியே நடைபெறும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
தற்போதைய பாராளுமன்றம் எதிர்வரும் மார்ச் மாதம் அளவிலேயே கலைக்கப்படவுள்ளதால், அத்தேர்தலுக்கும் புதிய வாக்காளர் இடாப்பு பயன்படுத்தப்பட முடியுமாகவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரியொருவர் கூறியுள்ளார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பில் உள்ளவர்களை விடவும் சுமார் 2 லட்சம் வாக்காளர்கள் புதிய இடாப்பில் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

