புதிய களனி பாலத்தின் நுழைவாயிலிலிருந்து களனி திஸ்ஸ சுற்றுவட்டம் வரையிலான வாகனப் போக்குவரத்து இன்று (15) மட்டுப்படுத்தப்படவுள்ளதாக போக்குவரத்துப் பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இதன்படி, இன்று காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரையான காலப்பகுதியில் குறித்த வீதி தற்காலிகமாக மூடப்பட உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மின்சார சபையினால் முன்னெடுக்கப்படும் மின்சார திருத்த நடவடிக்கைகளுக்காகவே இவ்வாறு வீதி மூடப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதனால் அதிவேக நெடுஞ்சாலை ஊடாக கட்டுநாயக்கவில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் அனைத்து வாகனங்களும் பேலியகொட வெளிச்சுற்றுகையை பயன்படுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.