புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் போது அதிகாரப் பகிர்வு, பௌத்த மதத்துக்கு முதன்மை வழங்குதல் என்பன தொடர்பில் தற்பொழுது இணக்கப்பாடொன்றுக்கு வந்துள்ளதாக அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பான மக்கள் கருத்துக்கணிப்புக் குழுவின் தலைவர் பேராசிரியர் லால் விஜேநாயக்க தெரிவித்துள்ளார்.
தேர்தல் முறைமை, ஜனாதிபதியின் அதிகாரம், ஆளுநரின் அதிகாரம் என்பன தொடர்பில் இதுவரை எந்தவித உடன்பாடும் காணப்படாதுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவை தொடர்பில், அரசியலமைப்பு உபகுழுக்கள் முன்வைக்கும் அறிக்கை மற்றும் கருத்துக்கள் என்பனவற்றை ஆய்வு செய்து அரசியலமைப்பு உருவாக்க சபையின் ஊடாக அரசியலமைப்பு சபைக்கு முன்வைக்கவுள்ளதாகவும் விஜேநாயக்க கூறியுள்ளார்.
அரசியலமைப்பு சபையினால் முன்வைக்கப்படும் அறிக்கை மற்றும் கருத்துக்கள் என்பவற்றை கலந்துரையாடியதன் பின்னர் ஏற்படும் இணக்கப்பாடுகளுக்கு ஏற்பட அரசியலமைப்பு சட்டமூலம் உருவாக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் மேலும் விளக்கியுள்ளார்.