இலங்கையில் நேற்றைய தினம் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எவரும் அடையாளம் காணப்படவில்லையென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 810 ஆகவே காணப்படுகிறது.
இதேநேரம் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து 21 பேர் வைத்தியசாலை மற்றும் சிகிச்சை நிலையங்களிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 317 ஆக பதிவாகியுள்ளது.
இதேவேளை, தற்போது நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் கொரோனா தொற்றுக்குள்ளான 482 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
அதேநேரம் கொரோனா தொற்று சந்தேகத்தில் 80 பேர் வைத்தியக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேநேரம் இந்த கொடிய வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் இதுவரையில் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.