பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் கள்ளக்சாராயம் குடித்த 9 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், ஏழு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பீகார் மாநிலத்தில் மது விற்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் சாராயம் விற்பனை முறைமுகமாக நடைபெற்று வருகிறது.
போதை அதிகமாக சாராயத்தில் ரசாயன பொருட்கள் அதிக அளவில் கலக்கப்படுகிறது. இதனால் சாராயம் கள்ளச்சாராயமாகி அப்பாவி மக்களின் உயிரை குடித்துவிடுகிறது.
அந்த வகையில் பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் இன்று சாராயம் குடித்த 9 பேர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தனர். 7 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]