ஜனாதிபதித் தேர்தலில் வாக்காளர் ஒருவர் தனது வாக்கை பிழையின்றி அளிப்பதற்கான ஒழுங்குகளை எடுத்துக் காட்டும் மாதிரி விளக்கப் படங்களை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
இந்த ஜனாதிபதித் தேர்தலில் 35 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதனால், விருப்பு வாக்குப் பதிவு முறையொன்றும் இத்தேர்தலில் பயன்படுத்தப்படுகின்றது.
இது குறித்து பலருக்கு இன்னும் தெளிவில்லாத ஒரு நிலைமை காணப்படுகின்றது. தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள வாக்களிப்பு தொடர்பான படம் வாக்காளர்களுக்கு தெளிவொன்றை வழங்கும் விதத்தில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

