தாய்லாந்தில் பிளாஸ்டிக் பொருட்களை சாப்பிட்டு உயிருக்குப் போராடிய கடல் பசுவின் குட்டியை கடலாராய்ச்சியாளர்கள் காப்பாற்றி உள்ளனர்.
அந்நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள கடல் பரப்பில் கடல் பசுவின் 2 குட்டிகள் சுற்றி வந்தன. ஒன்பது மாதக் குட்டிகளான அவற்றில் ஒரு குட்டி மூச்சுத் திணறி உயிரிழந்தது. இதனைக் கண்ட கடல் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த சிலர் உடனடியாக அந்தக் குட்டியை பரிசோதித்த போது அதன் வயிற்றிலும், வாயிலும் பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த மற்றொரு குட்டியை மீட்ட அந்தக் குழுவினர் அதற்கு உணவிட்டு வாயில் சிக்கியிருந்த பிளாஸ்டிக் பையை அகற்றி அதனைக் காப்பாற்றினர்.

